சங்கராபரணம் ரூபகதாளம் சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்மிலதாய், சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-துளூ அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? எம்மாவிக்குருகி உயரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய், சும்மாரஷணைசெய். சொல்தந்திரம் யாதுமிலேன், அம்மான் உன்னையல்லால் எனக்கார் துணை, யாருரவே? திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்கவென்றே புணையாயினை, கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன்ளூ என்னைப் பற்றிய பற்றுவிடாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்கான்ளூ 'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்ப்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்ளூ எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? து...
Comments
Post a Comment