Skip to main content

Posts

ரோஜாப்பூ வாசமலர்கள்

ரோஜாப்பூ வாசமலர்கள் என்கிற பழமையான இந்தப்பாடலை பாடியவர் சகோதரர் ஆர். ஜொசயா அவர்கள்.  அவரது சகோதிரி திருமதி. டாசனி அவர்களின்  திருமணம் 1962 ஆம் ஆண்டில் நாசரேத்தில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கதீட்ரலில் வைத்து நடை பெற்றது. அப்பொழுது இந்தப்பாடலை எழுதி பாடினார். இன்று உலகமெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ திருமணிங்களில் பாடப்பட்டு வருகின்றது.
Recent posts

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

சத்தாய் நிஷ்களமாய்

    சங்கராபரணம்                     ரூபகதாளம் சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்மிலதாய், சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-துளூ அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? எம்மாவிக்குருகி உயரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய், சும்மாரஷணைசெய். சொல்தந்திரம் யாதுமிலேன்,  அம்மான் உன்னையல்லால் எனக்கார் துணை, யாருரவே? திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்கவென்றே புணையாயினை, கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன்ளூ என்னைப் பற்றிய பற்றுவிடாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்கான்ளூ 'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்ப்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்ளூ  எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? து...

உம்மண்டை கர்த்தரே

   உம்மண்டை கர்த்தரே உம்மண்டை கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும்; என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே நான் சேர்வதே தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,  என்தன் கனாவிலே உம்மண்டை கர்த்தரே, இருப்பேனே நீர் என்னை நடத்தும்  பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; தூதர் அழைப்பாரே உம்மண்டை கர்த்தரே, நான் சேரவே விழித்து உம்மையே நான் துதிப்பேன், என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;  என் துன்பத்தாலுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே Nearer, my God, to Thee, nearer to Thee!  E'en though it be a cross that raiseth me;  Still all my song would be nearer, my God, to Thee,  Nearer, my God, to Thee, nearer to Thee!   Though like the wanderer, the sun gone down,  Darkness be over me, my rest a stone;  Yet in my dreams I'd be nearer, my God, to Thee,  Nearer, my God, to Thee, nearer to Thee!   There let the way appear steps unto heav'n;  All that Thou sendest me in...

இயேசு நேசிக்கிறார்

   இயேசு நேசிக்கிறார், இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார், இயேசு நேசிக்கிறார் இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மா தவமோ!             சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,   மாசில்லாத பரன் சுதன்றன் முழு   மனதால் நேசிக்கிறார்    -    இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்   நரராமீனரை நேசிக்கிறாரென   நவிலல் ஆச்சரியம்    -    இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்   நீதன் யேசெனை நேசிக்கிறாரெனல்   நித்தம் ஆச்சரியம்    -    இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்ளூ   அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே   ஆவலாய் பறப்பேன்    -    இயேசு 5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்   ஈசன் இயேசெனைத் தானேசித்தாரென்று    இணையில் கீதஞ் சொல்வேன் - இயேசு பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் கொலைக் குற்றத்திற்காக தூக்குத் தண்டணைப் பெற்ற கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்தார். சிறைச்சாலைக் கைதிகள் மத்தியில்...

கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!

    Charles Carroll Luther (1847-1924) கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா! உதவாமல் பலனற்று, வெட்கப்பட்டுப் போவேனோ? ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா? ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க் காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்! தேவரீர் கைதாங்க, சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்! ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்! வானான் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ? பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர் ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர் "Must I go, and empty handed," "Must I go, and empty handed,"  Thus my dear Redeemer meet?  Not one day of service give Him,  Lay no trophy at His feet? "Must I go, and empty handed?"  Must I meet my Savior so?  Not one soul with which to greet Him,  Must I empty handed go?  Not at death I shrink or falter,  For my Savior saves me now;  But to meet Him empty handed,...

எருசலேம் என் ஆலயம்

    எருசலேம் என் ஆலயம் வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம்  1. எருசலேம் என் ஆலயம்,   ஆசித்த வீடதே   நான் அதைக்கண்டு பாக்கியம்    அடைய வேண்டுமே. 2. பொற்றளம் போட்ட வீதியில்   எப்போதுலாவுவேன்?   பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்    எப்போது பணிவேன்? 3. எந்நாளும் கூட்டம் கூட்டமாய்   நிற்கும் அம்மோட்சத்தார்   கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்   ஓய்வின்றிப் பாமுவார். 4. நானும் அங்குள்ள கூட்டத்தில்   சேர்ந்தும்மைக் காணவே   வாஞ்சி;த்து, லோக து;பத்தில்   களிப்பேன், இயேசுவே. 5. எருசலேம் என் ஆலயம்,   நான் உன்னில் வாழுவேன்   என் ஆவல், என் அடைக்கலம்,   எப்போது சேருவேன்? நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாக இதை உபயோகித்து வந்தாள். வேதனைகளும், பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும், இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது. அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிக...