முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் அருள் நாதா, இயேசுவே!

 

Isaac Watts (1674-1748) 



When I survey the wonderous Cross


Rockinghom                            L.M

............................................................................................................................................................

என் அருள் நாதா, இயேசுவே!

சிலுவைக் காட்சி பார்க்கையில், 

பூலோக மேன்மை நஷ்டமே,

என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்


என் மீட்பர் சிலுவை அல்லால்,

வேறெதை நான் பாராட்டுவேன்?

சிற்றின்பம் யாவும் அதினால்

தகாததென்று தள்ளுவேன்.


கை, தலை, காலிலும் இதோ!

பேரன்பும் துன்பும் கலந்தே

பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ

முள் முடியும் ஒப்பற்றதே.


சராசரங்கள் அனைத்தும்

அவ்வன்புக்கு எம்மாத்திரம்!

என் ஜீவன் சுகம் செல்வமும்

என் நேசருக்குப் பாத்தியம்.


மாந்தர்க்கு மீட்பை கஸ்தியால்

சம்பாதித்தீந்த இயேசுவே

உமக்கு என்றும் தாசரால்

மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

.................................................................................................................................................................


போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ் ஒரு புகழ்பெற்ற கவிஞர். இங்கிலாந்தில் உள்ள சவுத்ஆம்டன் ல் 17 ஜுலை 1674 ல் பிறந்தார். 750 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆங்கிலப் பாடல்களை இவர் எழுதியிருப்பதால், ஆங்கிலப் பாடல்களின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். இவரது பாடல்கள் இன்றும் ஆராதனைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அவரது வாலிப நாட்களில், அவரை நேரில் பார்த்திராத ஓர் அழகான நாகரீகமான பெண், அவர் எழுதிய கவிதையின் அழகில் மயங்கினாள். அவரைக் காண ஆவலாய் ஓடி வந்தாள். அந்த நேரிடைந் சந்திப்பில், வாட்ஸ் அவளது அழகில் மயங்கி நிற்க, அவளோ அவரைப் பார்க்க சகிக்க முடியாமல் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். வாட்ஸ்; அவளிடம் தன்னைத் திருமணம் செய்ய வேண்டினார். அவளோ வாட்ஸ் இந்த விலையேறப் பெற்ற ஆபரணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்ளூ ஆனால், அது அமைந்திருக்கும் பெட்டகத்தை என்னால் விரும்பமுடியவில்லையே என்று கூறினாள். ஆம், வளர்ச்சி முற்றுப் பெறாத, அவலட்சணமான தோற்றமுடையவர்தான் ஐசக் வாட்ஸ்ளூ ஐந்து அடி உயரத்தில் குள்ளமானவராக இருந்தார். அவருடைய பெரிய தலையும், நீண்டு வளைந்த மூக்கும் அவருக்கு விகாரத் தோற்றமளித்தன. தன்னை நிராகரித்த அப்பெண்ணின் பதிலால் துவண்டுவிடாமல், பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஐசக் வாட்ஸ் தன் திருமணத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. 

பெலவீனமான சரீரமுடைய வாட்ஸ் தன் ஒன்பது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். தன் பதினான்காம் வயதில் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். சிலுவையில் தன்னையே தியாகப் பலியாக அளித்த இயேசுவின் அன்பை எண்ணி வியந்து, தன் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடலை எழுதினார். 

அந்நாட்களில், சுய அனுபவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளையோ அடிப்படையாகக்கொண்டு பாடல் எழுதுவதற்கு மிகுந்த எதிர்ப்புகள் இருந்தன. எனினும் தன் உள்ளத்தில் சிலுவைக் காட்சியை நிறுத்தியவராக வாட்ஸ் இப்பாடலை எழுதியிருக்கின்றார். 





ISAAC WATTS, D. D.

 Pastor of a Church of Christ in London,

 successor to

 THE REV. JOSEPH CARYL, DR. JOHN OWEN, MR. DAVID

 CLARKSON, AND DR. ISAAC CHAUNCY;

 after fifty years of feeble labours in the gospel,

 interrupted by four years of tiresome sickness,

 was at last dismissed to his rest.

 In uno Jesu omnia.

 2 Cor. v. 8. Absent from the body and present with the Lord.

 Col. iii. 4. When Christ who is my life shall appear, then shall I also

 appear with him in glory.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரோஜாப்பூ வாசமலர்கள்

ரோஜாப்பூ வாசமலர்கள் என்கிற பழமையான இந்தப்பாடலை பாடியவர் சகோதரர் ஆர். ஜொசயா அவர்கள்.  அவரது சகோதிரி திருமதி. டாசனி அவர்களின்  திருமணம் 1962 ஆம் ஆண்டில் நாசரேத்தில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கதீட்ரலில் வைத்து நடை பெற்றது. அப்பொழுது இந்தப்பாடலை எழுதி பாடினார். இன்று உலகமெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ திருமணிங்களில் பாடப்பட்டு வருகின்றது.

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

சத்தாய் நிஷ்களமாய்

    சங்கராபரணம்                     ரூபகதாளம் சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்மிலதாய், சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-துளூ அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? எம்மாவிக்குருகி உயரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய், சும்மாரஷணைசெய். சொல்தந்திரம் யாதுமிலேன்,  அம்மான் உன்னையல்லால் எனக்கார் துணை, யாருரவே? திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்கவென்றே புணையாயினை, கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன்ளூ என்னைப் பற்றிய பற்றுவிடாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்கான்ளூ 'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்ப்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்ளூ  எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? து...