Charles Carroll Luther (1847-1924)
கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!
உதவாமல் பலனற்று, வெட்கப்பட்டுப் போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா?
ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்!
தேவரீர் கைதாங்க, சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்!
ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்!
வானான் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர்
"Must I go, and empty handed,"
"Must I go, and empty handed,"
Thus my dear Redeemer meet?
Not one day of service give Him,
Lay no trophy at His feet?
"Must I go, and empty handed?"
Must I meet my Savior so?
Not one soul with which to greet Him,
Must I empty handed go?
Not at death I shrink or falter,
For my Savior saves me now;
But to meet Him empty handed,
Thought of that now clouds my brow.
O the years in sinning wasted,
Could I but recall them now,
I would give them to my Savior,
To His will I’d gladly bow.
O ye saints, arouse, be earnest,
Up and work while yet ’tis day;
Ere the night of death o’ertake thee,
Strive for souls while still you may.
சார்லஸ் கேரல் லூத்தர் ஒரு பாப்திஸ்து சபைப் போதகர். 1886 ம் ஆண்டு போதகராகும் வரை, அவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் பின்னர் நற்செய்தி பணியாளராகவும் பணி செய்தார். அவர் பல பாடல்களை எழுதவில்லை என்றபோதிலும், 1877 ல் மரணத்தருவாயில் இருந்த ஒரு வாலிபனைப் பற்றி போதகர் ஒருவர் கூறிய சம்பவம் இப்பாடலை எழுதும்படி இவரைத் தூண்டியது.
அந்த வாலிபன் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்தான். தனது வாழ்வின் கடைசி மணித்துளிகளில் இரட்பிப்பின் இலவச ஈவைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினான். ஆயினும் அவரைப் பற்றி பலரிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என வருந்தினான். 'நான் மரிப்பதைக் குறித்துப் பயப்படவில்லை, ஆனால் வெறுங்கையாய் நான் ஆண்டவரிடம் செல்லவேண்டுமா?' என அங்கலாய்த்தான். இந்த வாலிபனின் அங்கலாய்ப்பை சவாலாக வைத்து லூத்தர் இப்பாடலை எழுதினார்.
அநேக கிறிஸ்தவர்கள் இந்த வாலிபனை விட அதி சீக்கிரமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அநேகருக்கு அவரை அறிவிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக