Skip to main content

உம்மண்டை கர்த்தரே

 

 உம்மண்டை கர்த்தரே





உம்மண்டை கர்த்தரே,

நான் சேரட்டும்;

சிலுவை சுமந்து நடப்பினும்;

என் ஆவல் என்றுமே

உம்மண்டை, கர்த்தரே

நான் சேர்வதே


தாசன் யாக்கோபைப் போல்

ராக்காலத்தில்

திக்கற்றுக் கல்லின் மேல்

தூங்குகையில், 

என்தன் கனாவிலே

உம்மண்டை கர்த்தரே,

இருப்பேனே


நீர் என்னை நடத்தும் 

பாதை எல்லாம்

விண் எட்டும் ஏணிபோல்

விளங்குமாம்;

தூதர் அழைப்பாரே

உம்மண்டை கர்த்தரே,

நான் சேரவே


விழித்து உம்மையே

நான் துதிப்பேன்,

என் துயர்க் கல்லை உம்

வீடாக்குவேன்; 

என் துன்பத்தாலுமே

உம்மண்டை, கர்த்தரே,

நான் சேர்வேனே


Nearer, my God, to Thee, nearer to Thee!
 E'en though it be a cross that raiseth me;
 Still all my song would be nearer, my God, to Thee,
 Nearer, my God, to Thee, nearer to Thee! 

 Though like the wanderer, the sun gone down,
 Darkness be over me, my rest a stone;
 Yet in my dreams I'd be nearer, my God, to Thee,
 Nearer, my God, to Thee, nearer to Thee! 

 There let the way appear steps unto heav'n;
 All that Thou sendest me in mercy giv'n;
 Angels to beckon me nearer, my God, to Thee,
 Nearer, my God, to Thee, nearer to Thee! 

 The with my waking thoughts bright with Thy praise,
 Out of my stony griefs Bethel I'll raise;
 So by my woes to be nearer, my God, to Thee,
 Nearer, my God, to Thee, nearer to Thee! 

 Or if on joyful wing, cleaving the sky,
 Sun, moon, and stars forgot, upwards I fly,
 Still all my song shall be, nearer, my God, to Thee,
 Nearer, my God, to Thee, nearer to Thee!


இப்பாடலை எழுதிய சாரா இங்கிலாந்திலுள்ள ஹார்லோவில் 1805 ம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று பிறந்தார். இவரது தந்தை பெஞ்சமின் 'கேம்பிரிட்ஜ் இன்டெலிஜென்சர்' என்ற வாராந்திர புரட்சிப் பத்திரிக்கையின் நிருபர்; எனவே தந்தையின் எழுத்துத் திறமையை மகளும் பெற்றிருந்தாள்.

சாரா இளம் வயதிலேயே, அவர் பங்குபெறும் திருச்சபையின் செய்தி மலரில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுவார். பல தாலந்துகள் படைத்த சாரா ஒரு நல்ல அழகிய தோற்றம் உடையவர்; அத்துடன், நடிப்பதிலும் திறமை மிக்கவர். 1834ம் ஆண்டு ஜான் பிரிட்ஜஸ் ஆடம்ஸ் என்ற பிரபல பொறியியல் வல்லுனரைத் திருமணம் செய்துகொண்டார். அவருடைய பல்வேறு தாலந்துகளையும், விருப்பங்களையும் அறிந்த அவரது கணவர், அவரை மிகவும் உற்சாகப்படுத்தினார். 1837ல் லண்டனில் உள்ள ரிச்சர்டு கலையரங்கத்தில் மாக்பெத் சீமாட்டியாக நடித்தார். ஆயினும் அவரது உடல்நிலை பெலவீனமாக இருந்ததால், அவளால் தொடர்ந்து அதில் ஈடுபடமுடியவில்லை.  எனவே நடிப்பதை விட்டுவிட்டு, எழுத்துப்பணியில் தனது கவனத்தைத் திருப்பினாள்; சிறந்த எழுத்தாளராக மாறினார். 

சாராவின் சகோதரி எலிசபெத் இசை அமைப்பதில் தாலந்து படைத்தவளாக விளங்கினாள். எனவே. திறமைவாய்ந்த இச்கோதரிகளிடம் அவர்களது ஆலயப் போதகர் மறைதிரு வில்லியம் ஜான்சன் பாக்ஸ் தன் திருச்சபைக்கு ஒரு புதிய பாடல் புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சகோதரிகள் பழைய பாடல்களுடன்,  13 புதிய பாடல்களையும் மற்றும் 62 புதிய ராகங்களையும் இப்புதிய பாடல் புத்தகத்தில் தங்கள் காணிக்கையாகச் சேர்த்தனர்.  

Comments

Popular posts from this blog

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

சத்தாய் நிஷ்களமாய்

    சங்கராபரணம்                     ரூபகதாளம் சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்மிலதாய், சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-துளூ அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? எம்மாவிக்குருகி உயரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய், சும்மாரஷணைசெய். சொல்தந்திரம் யாதுமிலேன்,  அம்மான் உன்னையல்லால் எனக்கார் துணை, யாருரவே? திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்கவென்றே புணையாயினை, கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன்ளூ என்னைப் பற்றிய பற்றுவிடாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்கான்ளூ 'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்ப்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்ளூ  எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே? து...

ரோஜாப்பூ வாசமலர்கள்

ரோஜாப்பூ வாசமலர்கள் என்கிற பழமையான இந்தப்பாடலை பாடியவர் சகோதரர் ஆர். ஜொசயா அவர்கள்.  அவரது சகோதிரி திருமதி. டாசனி அவர்களின்  திருமணம் 1962 ஆம் ஆண்டில் நாசரேத்தில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கதீட்ரலில் வைத்து நடை பெற்றது. அப்பொழுது இந்தப்பாடலை எழுதி பாடினார். இன்று உலகமெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ திருமணிங்களில் பாடப்பட்டு வருகின்றது.