எருசலேம் என் ஆலயம்
வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம்
1. எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக்கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே.
2. பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?
3. எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாமுவார்.
4. நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சி;த்து, லோக து;பத்தில்
களிப்பேன், இயேசுவே.
5. எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?
நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாக இதை உபயோகித்து வந்தாள். வேதனைகளும், பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும், இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது. அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பும் போது, வீட்டிலிருந்து அவன் தாய் பாடும் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும்.
நாளடைவில், அவன் தாய் வியாதிப்பட்டு பலவீனமடைந்த போதும், இப்பாடலை மெல்லிய குரலில் அவள் பாட, அவன் கேட்பதுண்டு. சில நாட்களுக்குப்பின் அவனது தாய் மரித்தாள். தாயின் பாடல் ஒலியும் மறைந்து Nபுhனர். அன்பற்று கடுமையாய் நடத்திய தன் தகப்பனின் செயலைப் பொறுக்;க முடியாமல், அவன் தன் உடைமைகளையும் தன் தாயின் பொக்கிஷமான வேதபுத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு பட்டணத்திற்கு ஓடிப் போனான். அங்கு தீய நண்பர்களோடு பழகி, தன்; வாழ்க்கையையும், உடலையும் கெடுத்து வியாதிப்பட்டான்.
ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவனைச் சந்திக்க, மிஷனரி ஒருவர் வந்தார். ஆண்டவின் அன்பைப் பற்றி அவர் பலமுறை எடுத்துக்கூறியும், அவன் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இம்முயற்சியில் தோல்வியுற்று, மனமுடைந்த மிஷனரி, மரிக்கும் அந்த வாலிபனை விட்டு சற்றே விலகி, ஜன்னலருகே சென்று, இப்பாடலை சோர்வுடன், மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். அதைக் கேட்டவுடன், அவ்வாலிபன் கண்ணீர் மல்க, 'இது என் தாய் விரும்பிப் பாடும் பாட்டல்லவா!' என்று கூறினான். அப்போது, அவன் தாயின் அன்பும், அவளது ஜெபங்களும், பக்தி நிறைந்த வாழ்க்கையும், அவன் மனக்கண்முன் தோன்றின. 'என் தந்தையின கொடூர நடத்தையால் நான் வீட்டை விட்டு வெளியேறின போதெல்லாம் என்னை அன்போடு தடுத்தது என் தாயின் இந்தப்பாடல் தானே! எத்தனை ஆண்டுகள் இதை மறந்து போனேன்!' என்று கதறினான்.
அந்நிலையில், தாயின் அன்புக்கும் மேலான இயேசுவின் அன்பை, மிஷனரி மீண்டும் எடுத்துரைத்தார். அவன் ஏற்றுக் கொண்டு, அவருடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான். அமைதியாக விளங்கிய அவன் முகத்தை நோக்கிய வண்ணம், மிஷனரி கூறினார், 'அந்தத் தாயின் பாடல்! தூர இடங்களில் அலைந்து திரிந்த அவளது மகனைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ள, ஆண்டவர் இப்பாடலையல்லவா உபயோகித்தார்!'.
இந்த அருமையான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. 'கு.டீ.P.' என்ற கையெழுத்தை மட்டும் விட்டுச் சென்ற இவர், 16 அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியாராக இருக்கக்கூடுமென கருதப்படுகிறது.
எக்கிங்டனின் போதகர், ஜோசப் பிரோம்ஹெட் என்பவரை, அப்போது உபயோகத்திலிருந்த ஆலயப்பாடல் புத்தகத்தைத் திருத்தி அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி 1795ம் ஆண்டு வெளிவந்த, புதுப்பாடல் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட 37 பாடல்களில் இப்பாடலும் ஒன்று. பரலோகத்தைப் பற்றி, நானூறு வார்த்தைகளங்கிய கட்டுரையாக, இது முதலில் உருவெடுத்தது. வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு, ஆசிரியரின் உணர்ச்சி மிக்க படைப்பாக உருவானது. முதலில் அநேக எழுத்துப் பிழைகளுடன், 26 சரணங்களைக் கொண்டிருந்த இப்பாடலில், 7 சரணங்களே இப்போது உபயோகத்திலுள்ளன. இப்பாடலின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றவர் பலர்.
இந்நாட்களில், இறந்தோர் வீடுகளில், மற்றும் அடக்க ஆராதனைகளில் மட்;டும் இப்பாடல் பாடப்படுகிறது. தன் மரணத்தையோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையையோ சந்திக்க ஆயத்தமில்லாத, பல கிறிஸ்தவ மக்களுக்கு, மரண பயத்தையும், திகிலையும் ஊட்டும் சாவுப்பாடலாக இது மாறியிருப்பது வேதனைக்குரிய காரியம். ஆனால், பரலோகத்தை அழகாக சித்தரிக்கும் இப்பாடல், இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களுக்கு, நித்திய வாழ்வின் நம்பிக்கையூட்டுவதாக விளங்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக